உள்நாடு

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக காணாமற்போயிருந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மாதம்பை பிரதேசத்தின் பணிரென்டாவ வனப்பகுதிக்குள் இருந்து இளைஞனின் உடல் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய, வெரளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இளைஞன் ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்தார்.அவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் காணாமல் போயிருந்த காரணத்தினால், காதலியின் பெற்றோர் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.

அத்துடன் குறித்த இளைஞனின் காதலி உள்ளிட்ட அவரது பெற்றோர், குடும்பத்தினர் திடீரென்று பிரதேசத்தை விட்டும் தலைமறைவாகி இருந்தமை இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்நிலையில் காணாமல் போன இளைஞனின் காதலியின் உறவினர் ஒருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்த போது இன்றையதினம் காணாமல் போன இளைஞனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

Related posts

சீரற்ற காலநிலை – 03 இறப்புகள் – 7,649 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

editor

அமெரிக்காவில் கல்விக் கடன் ரத்து!