உள்நாடு

பொன்சேகா: ஐ.ம.ச மனுவைப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது!

நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்குவதற்குக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த சீராய்வு மனுவைப் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

இந்த மனு நேற்று அழைக்கப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் இம்மாதம் 21ஆம் திகதி குறித்த மனுவை விசாரிக்க உத்தரவிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரால் இந்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் – விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – அளுத்மாவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]

 பற்றாக்குறையாக மருந்துகளின் பட்டியல் வெளியானது