உள்நாடு

SLPPமுக்கியஸ்தர்களுக்கு அவசர அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் முற்பகல் 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

காய்கறிகள் விலை எதிர்பாராத வகையில் வீழ்ச்சி

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்

ஐ.தே.க பொது கூட்டணியில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி [PHOTO]