உள்நாடுசூடான செய்திகள் 1

கலைக்கப்படும் நாடாளுமன்றம்? ரணில் உடன்படுவாரா? SLPP தொடர் அழுத்தம்

நாடாளுமன்றத்தை உடன் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடப்படவுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக பொதுஜன பெரமுன நிறுவனர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

ஏதோ வகையில் அவசரமாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்து தேர்தல்களுக்கும் தமது கட்சி வேறு எந்த சின்னத்திலும் போட்டியிடாது எனவும், தமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிடும் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

பசில் – ரணில் சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று (04) பிற்பகல் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டார்.

கடந்த மே தினம் குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இந்த சந்திப்பில் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் அண்மையில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் அது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பசில் ராஜபக்சவுடனான நேற்றைய கலந்துரையாடல் மிகவும் சுமுகமானதாக அமைந்ததுடன், எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்த இந்த கலந்துரையாடல் பெரிதும் உதவியுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை