உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் அதிக வெப்பம்: “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண்  அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் “அவதானம் செலுத்தப்பட வேண்டிய” மட்டத்தில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள், நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு காரணமாக உஷ்ணப் பிடிப்புகள் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் 5 பேர் பூரண குணம்

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி