உள்நாடுசூடான செய்திகள் 1

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தினப் பேரணியில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இணைந்துகொண்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரிலேயே தான் இந்தப் பேரணியில் கலந்துகொண்டதாகவும் எனினும், ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

பொரள்ளை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

இலங்கை வீரர்கள் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்து (video)