உள்நாடுபுகைப்படங்கள்

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக சட்டத்தரணி அமீர் அஜ்வத் : கௌரவிக்கும் மீடியா போரம்

அஷ்ரப் ஏ சமத்

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க். அமீர் அஜ்வத் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு 03 இல் உள்ள ‘இந்தியன் சமர் டிரெஸ்டோரண்டில்’ இன்று (25.04.2024) இடம்பெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள், ஒலி, ஒளிபரப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மீடியா போரத்தின் உப தலைவர்களுள் ஒருவரான விடிவெள்ளி ஆசிரியர் பைருஸ் அவர்கள் தூதுவர் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். மீடியா போரத்தின் சார்பாக நினைவுச் சின்னத்தினை சிரேஷ்ட ஊடகவியலாளர் உப தலைவர்களுள் ஒருவரான எம்.ஏ.எம் நிலாம் வழங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், குறிப்பாக ஊடகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த செயற்பாடுகளுக்கான ஊக்கமளிக்கும் வகையில் இருநாட்டு தொடர்புகளை விஸ்தரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. எதிர் காலத்தில் ஊடக செயற்பாட்டாளர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் குறித்துக் காட்டப்பட்ட சில சமூக நலன் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இது விஷயங்கள் அத்தனையும் உள்வாங்கிய கௌரவ தூதுவர் எதிர்காலத்தில் தன்னால் எமது நாட்டுக்கு ஆற்ற உள்ள பல்வேறு நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விளக்கிக் கூறியமை சிறப்பம்சமாகும். புதிய தூதுவர் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி அளவில் சவுதி அரேபியா விற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜாமியா நளீமியா, பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணி மற்றும் சட்ட முதுமாணிப் பட்டங்கள் பெற்று 1997ல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்! இலங்கை வெளிவிவகார சேவையைப் பெற்று பல்வேறு நாடுகளின் இராஜதந்திர சேவையில் இணைந்து கொண்டார். தற்போது இலங்கை வெளிவிவகார அமைச்சில் மேலதிகச் செயலாளர் விளங்கும் O.L அமீர் அஜ்வத் அவர்கள்

ஏற்கனவே ஓமான் மற்றும் யெமன் நாடுகளிலும் இலங்கைத் தூதுவராக கடமையாற்றி உள்ளதோடு அடுத்த மாதம் முற்பகுதியில் சவுதி அரேபியா தூதுவராகப் பொறுப்பேற்க காத்திருக்கிறார்!

Related posts

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

 தங்கத்தின் இன்றைய நிலவரம்

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!