உள்நாடுசூடான செய்திகள் 1

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்

 

கத்தோலிக்க சட்டத்தரணிகள் சமூகத்தை அழைத்து அதிகாரமுடைய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பற்ற  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை  மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து விவாதிப்பதைவிட அதற்கு தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் இதற்கு தீர்வாக கத்தோலிக்க சட்டத்தரணிகள் சமூகத்தை அழைத்து அதிகாரமுடைய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும். அது தொடர்பிலான  சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அந்த ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்க வேண்டும்.

இந்த விடயத்தை அரசாங்கமோ நானோ தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த பிரேரணையை சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்வைத்திருக்கலாம். இலங்கையில் கத்தாேலிக்க சமூகத்தைச் சேர்ந்த தலைசிறந்த சட்டத்தரணிகள் இருக்கின்றனர்.இவர்கள் மூலம் அமைக்கப்படும் ஆணைக்குழுவுக்கு, உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து வழக்குகளையும் எடுத்துக்கொள்ளுமாறு தெரிவிப்போம். தாக்குதல் தொடர்பில் 93பேருக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த 93பேரையும் ஆணைக்குழுவுக்கு அழைத்து விசாரிக்கவேண்டும்.

அதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தரவுகளையும் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். அதன் பின்னர் இந்த விசாரணைக்கு அரசியல் தலையீடுகளை யாராவது மேற்கொள்வதாக இருந்தால் அதனை எங்களுக்கு தெரிவிக்கவும். அப்போது நாங்கள் வெளியில் வந்து இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறான பிரேரணை ஒன்றை முன்வைக்காமல், அதிகாரத்துககு வந்தால் நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து கடிதம் எழுதுவதற்கு வெட்கம் இல்லையா என கேட்கிறோம். கத்தாேலிக்க சமூகத்தைச் சேர்ந்த  சட்டத்தரணிகள்  ஆணைக்குழுவுக்கு அழுத்தங்கள் வருமாக இருந்தால், அவர்களுக்கு  வத்திகானுக்கு இதுதொடர்பில் முறையிடலாம்.

அவ்வாறு இல்லாமல் இது தொடர்பாக கதைப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை.அரசியல்  இலாபம் தேடவே தற்போது இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களு்ககு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேவை இருக்குமானால் அன்று இவர்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்று, இதனை செய்திருக்கவேண்டு்ம். அதனை செய்யவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு தேவை. அதனையே தற்போது நான் முன்வைத்திருக்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் நானே அதிகம் விமர்சிக்கப்பட்டேன. என்றாலும்  எனது மதத்துக்காக தொடர்ந்தும் பொறுமையாக இருக்கிறேன் என்றார்.

video:

Related posts

இலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது