உள்நாடுசூடான செய்திகள் 1

MPகளுக்காக பிரதேச செயலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு: வடக்கு MPக்களுக்கு விஷேட நிதி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதிக்கும் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றும் செயற்பாடுகள் தாமதமாகி வருவதால், இது குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த வியாழக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள கிராம அபிவிருத்திக் குழுக்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அத்துடன், 2024 பாதீட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டத்துக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட என்ற ரீதியில் வடக்கு மாகாணத்திலுள்ள எதிர் மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்படும் நிதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் ஆற்றிய உரையை பார்வையிட இங்கு க்ளிக் செய்க. 

Related posts

கெஹெலியவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

எல்லோரிடமும் குறைகள் உண்டு – நாங்கள் அதை சரிசெய்வோம் – நாமல்

editor

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை