ஜனாதிபதி தேர்தல் களநிலைவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்துவரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் , அது தொடர்பான கருத்து கணிப்பு அறிக்கையை மே நடுப்பகுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் தற்போது இருக்கும் ஜனாதிபதி, மேற்படி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இறுதியானதொரு முடிவை எடுத்து அது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் அறிமுடிகின்றது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பனவும் கிராமிய மட்டத்தில் கருத்து கணிப்புகளை நடத்திவருகின்றன. இதன்போது பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பிரச்சார வியூகம் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்துக்கான உள்ளடக்கங்களும் செய்யப்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.