உள்நாடு

ரணிலின் அறிவிப்புக்கு பின்பே எமது அறிவிப்பு : பசில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்க்ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்  பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை பொறுப்பேற்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் கட்சி ஏற்கனவே நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் பசில் ராஜபக்க்ஷ ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.

Related posts

நாளை தவணை ஆரம்பம் !

உத்தர தேவி தடம் புரண்டது

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்