உள்நாடு

இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் முதல் பல்வேறு இடங்களில் கடும்போக்குவாதம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் சர்வதேச சக்திகள் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர்(Athuraliye Rathana Thero) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக வாசித்தால் யார் சூத்திரதாரி என்பதனை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய கடும்போக்குவாதம் தொடர்பிலான அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரும்பான்மையான முஸ்லிம்கள் நடுநிலைக் கொள்கையுடன் அமைதியாக சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அறிக்கையின் பிரகாரம் இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் முதல் பல்வேறு இடங்களில் கடும்போக்குவாதம் விதைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சஹ்ரான் போன்ற பலர்  இலங்கையில் மூளைச் சலவைச் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.  SPEECH VIDEO

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

கொழும்பில் spa க்களை சுற்றி வளைத்து அதிரடி வேட்டையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி