உள்நாடு

ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு  பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 2ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, ஆட்சேர்ப்பு நேர்முக பரீட்சைகள் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை அமைப்பில் நிலவும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கல்வி அதிகாரிகள் இதுவரை முறையான வேலைத்திட்டம் எதையும் தயாரிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்கள் உரிய இடங்களுக்கு நிலைநிறுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

Related posts

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

கொழும்பில் கொரோனா பரவல் குறைவடையலாம்