உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ரணில்பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே மொட்டுக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

இதற்கு முன்னரும் ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரு சந்திப்புகள் நடைபெற்றன. இதன்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறும் பசிலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேபோல் அடுத்த தேர்தல்களைக் கூட்டணியாக எதிர்கொள்வது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் நோக்கில் மூன்றாம் கட்ட சந்திப்பு இடம்பெறுகின்றது.

 

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்

மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை ஜனாதிபதி சந்தித்தார்