உள்நாடுவகைப்படுத்தப்படாத

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

chamuditha ranil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காக, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்குகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டுள்ள முறைபாட்டிற்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘நீதவான் திலின கமகேவை (Thilina Gamage) கொல்வதற்கு பாதாள உலகத்துடன் இணைந்து சதி செய்த டி.ஐ.ஜி சகாவின் ஒலி நாடா இதோ’ எனும் தலைப்பினை கொண்ட காணொளி சமுதிதவால் அவரது யூடியூப் தளத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த காணொளி தொடர்பான அனைத்து விபரங்களையும் தகவல்களையும் கொண்டுவருமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சமுதிதவிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த காணொளியில் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan யை தயாரிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிதி ஒதுக்கீடு….!

போலி நாணயத்தாள் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்.