உலகம்உள்நாடு

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு

ஈரான்மீ து இஸ்ரேல் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

பங்குகளும் பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம், பங்குகள் போன்றவற்றில் இது பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டொலர்களாக ஆக உள்ளது.

அதே நேரம் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டொர்களுக்கு மேல் புதிய உச்சமாக பதிவாகியுள்ளது.

ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன.

கடந்த வார இறுதியில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகமான பிபிசி குறிப்பிட்டுள்ளது.

Related posts

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்