உள்நாடு

“வசத் சிரிய – 2024” புத்தாண்டு அழகன்-அழகி விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

– ஸ்டேன்டட் சைக்கிள் ஓட்டப் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 25 நண்பகல் 12.00 வரை ஏற்கப்படும்

– மரதன் ஓட்டப் போட்டி விண்ணப்பம் ஏப்ர ல் 26 காலை 10.00 வரை ஏற்பு

– சகல வெற்றியாளர்களுக்கும் பெறுமதியான பரிசில்

– சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க பல நிகழ்ச்சிகளுடன் ‘வசத் சிரிய 2024’ ஏற்பாடு

ஜனாதிபதி செயலக நலன்புரிச் சங்கம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலி முகத்திடலில் சங்கரில்லா பசுமை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2024″ தமிழ், சிங்களப் புத்தாண்டின் அழகன்-அழகிப் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் ஏப்ரல் 23 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் 3 மாதங்களுக்குள் பிடித்த வர்ணப் புகைப்படத்துடன் பெயர், வயது, உயரம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை 23 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் 0771557146 எனும் வட்ஸ் அப் இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். சகல விண்ணப்பதாரிகளும் 18-30 வயதிற்குட்பட்ட திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். தமிழர் கலாச்சார உடையிலும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

வசத் சிரிய புத்தாண்டு அழகர்-அழகி போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடம் பெறுவோருக்கு 75 ஆயிரம் ரூபாவும் மூன்றாமிடம் பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். 12 ஆம் இடம் வரை ஆறுதல் பரிசிலும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டி நிபந்தனைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஏற்பாட்டுக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை திருமதி கிரிசாந்தி விதாரணவை (ஒருங்கிணைப்பாளர்) 0718412300 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

வசத் சிரிய” ஸ்டேன்டட் சைக்கிள் ஓட்டப் போட்டி (ஆண்கள்/பெண்கள்) வயதெல்லையின்றி நடத்தப்படும். இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

ஆண்களுக்கான ஸ்டேன்டட் சைக்கிள் சவாரி காலி முகத் திடலில் இருந்து ஆரம்பமாகி நீர்கொழும்பு வீதி, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவாங்கொடை, வெயங்கொடை, நிட்டம்புவ, கண்டி வீதி, கடவத்தை, பேலியகொட ஊடாகச் சென்று மீண்டும் காலி முகத்திடலில் நிறைவடையும்.

மகளிர் பிரிவுக்கான போட்டி காலி முகத்திடலில் இருந்து ஆரம்பமாகி பாமண்கட, பிலியந்தலை, கெஸ்பேவ, கொட்டாவ, மஹரகம, நுகேகொட, தும்முல்ல சந்தி, பித்தளைச் சந்தி, லேக்ஹவுஸ் ஊடாக பயணித்து மீண்டும் காலி முகத்திடலில் நிறைவடையும்.

இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டாண்டர்ட் சைக்கிள்களில் முன் மற்றும் பின் கியர்கள் 48 மற்றும் 18, ஹேண்டில்பார் ரெஸ்ட் பார்/ஹேக் பார் என்பவற்றைப் பயன்டுத்த தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கிறது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தாங்கள் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக அரச பதிவு செய்த மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று, “Syria 2024 Cycling Race, Sri Lanka Air Force Base.Colombo.” எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அல்லது, இலங்கை விமானப்படை முகாமின் கொழும்பு பிரதான பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஸ்கேன் செய்து 070-3166384 என்ற தொலைபேசி எண்ணுக்கு WhatsAppஇல் அனுப்பலாம்.

2024 ஏப்ரல் 25 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு WhatsApp செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த விண்ணப்பம் மற்றும் பதிவுக்கு கட்டணம் அறிவிடப்பட மாட்டாது.

ஸ்டாண்டர்ட் சைக்கிள் ஓட்டப் போட்டி (ஆண்கள்) முதல் இடத்திற்கு ரூ.100,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000, நான்காம் இடத்திற்கு ரூ.35,000, ஐந்தாம் இடத்திற்கு ரூ.20,000, 6 முதல் 10 இடங்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் 11 முதல் 20 இடம் வரையான இடங்களை பெறுவோருக்கு ரூ.6,000. வீதம் வழங்கப்படும்.

பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 60,000 ரூபாயும், இரண்டாம் இடத்துக்கு 40,000 ரூபாயும், மூன்றாம் இடத்துக்கு 30,000 ரூபாயும், நான்காம் இடத்துக்கு 20,000 ரூபாயும், ஐந்தாம் இடத்துக்கு 15,000 ரூபாயும், 6 முதல் 10ஆம் இடங்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும்.

வசத் சிரிய மரதன் ஓட்டப் போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் பங்குபற்ற முடியும். www.pmd.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளீர்கள் என்பதை பதிவு செய்யப்பட்ட அரச மருத்துவர் ஒருவர் ஊடாக உறுதிப்படுத்திய பின்னர், “இலங்கை இராணுவ விளையாட்டு மருத்துவப் பிரிவு, இராணுவ விளையாட்டு அபிவிருத்தி கிராமம், இராணுவ காலனி, பனாகொட, ஹோமாகம” எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடித உறையின் மேல்பக்க இடது மூலையில் “வசத் சிரிய திறந்த மரதன் போட்டி 2024” என்று குறிப்பிட வேண்டும்.

இல்லையெனில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் தெளிவான படத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் பாதுகாப்பு பிரிவின் 0710573828 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்ப முடியும். 2024 ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மரதன் ஓட்டப் போட்டியில் (ஆண்கள்) முதல் இடத்திற்காக ரூ.75,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.50,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.30,000, நான்காம் இடத்திற்கு ரூ.20,000, ஐந்தாம் இடத்திற்கு ரூ.15,000, ஆறு முதல் பத்தாம் இடம் வரை தலா ரூ.10,000, பதினொன்றாம் இடத்திலிருந்து பதினைந்தாம் இடத்துக்கு தலா 5,000 ரூபா என்ற அடிப்படையில் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

மகளிருக்கான மரதன் போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு 50,000 ரூபாயும், இரண்டாம் இடத்துக்கு 30,000 ரூபாயும், மூன்றாம் இடத்திற்கு 20,000 ரூபாயும், நான்காம் இடத்துக்கு 15,000 ரூபாயும், ஐந்தாம் இடத்துக்கு 10,000 ரூபாயும், ஆறு மற்றும் ஏழாவது இடங்களுக்கு 7,500 ரூபாயும் எட்டாவது முதல் பத்தாவது இடம் வரை தலா 5,000 ரூபாவும் வழங்கப்படும்.

“வசத் சிரிய” கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் அணிகளின் பட்டியலை மூன்று நாட்களுக்கு முன்னதாக ஏற்பாட்டுக் குழுவிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 08 வீரர்கள் விளையாடலாம் மற்றும் இரண்டு கூடுதல் வீரர்களுடன் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 10 ஆகும்.

அரசாங்க, தனியார், திறந்த மற்றும் வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் நடத்தப்படவிருக்கும் போட்டிகள் அரச நிறுவன ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சகாக்கள், பிள்ளைகளுக்காக ஆண் / பெண் இரு பிரிவுகளில் 17 போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

எந்தவொரு இலங்கையரும் பங்கேற்கக்கூடிய ஒரு திறந்த பிரிவின் கீழ் 16 போட்டி நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. “புர செரிய” ஸ்டாண்டர்ட் சைக்கிளோட்டப் போட்டி, மரதன் ஓட்டம், சறுக்கு மரம், கயிறு இழுத்தல், , பலூன் வெடிப்பு, யானைக்குக் கண்வைத்தல், அழகான புன்னகை, புத்தாண்டு அழகர் / அழகி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.

மேலும், வெளிநாட்டவர்கள், தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானைக்கு கண் வைத்தல், பானை உடைத்தல், ஊசி நூல் கோர்த்தல், கண்ணைக் கட்டி பால் ஊட்டுதல், பலூன் வெடித்தல், சங்கீதக் கதிரைப் போட்டி, சங்கீதத் தொப்பிப் போட்டி பனிஸ் சாப்பிடுவது உள்ளிட்ட 10 போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆரம்பகால கிராமத்துக்கும் கிராமத்துக்கும் இடையே இருந்த அழகான உறவை வெளிப்படுத்தும் ஒரு மாதிரிக் கிராமத்து வீடும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், “வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டமானது, இலங்கையின் பெருமைமிக்க முன்னோக்கி செல்லும் வழி உட்பட, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் கலாசாரம் மற்றும் கடந்த கால பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் பல கூறுகளுடன் அலங்கரிக்கப்படவுள்ளது. கடினமான காலத்திற்குப் பிறகு மீண்டும் இந்த தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுளது.

‘வசத் சிரிய- சிங்கள இசை நிகழ்ச்சி’அன்றிரவு 7.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிரபல பாடகர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் வீடுகளுக்கு