உள்நாடு

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!

முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியை இலங்கையில் விசேட லீவாக பிரகடனப்படுத்துமாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பாக இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாது பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சர்க்கு இன்று 2024.04.17 அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் புனித ரமலான் நோன்பு பெருநாளை தமது மத கலாச்சார விழுமியங்களுக்கு அமைவாக ஏப்ரல் 10-ஆம் தேதி அனுஷ்டித்தனர்
இத்தினம் அரச அலுவலக வேலை நாளாக உள்ளமையினால் குறித்த தினம் சொந்த விடுமுறையில் பெரு நாளை கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
இந்த நிலையை கருத்திற் கொண்டு இலங்கை முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 திகதியை முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நூருல் ஹுதா உமர்

Related posts

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

editor

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு!