நாடாளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியான பாதீட்டு அதிகாரிக்கு’ மொத்த மாதச் சம்பளம் 665,000 ரூபாய் வழங்கப்படும் என்றும்.உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, அதிகாரியின் அடிப்படை சம்பளம் 408,360 என்றும், அது அனைத்து கொடுப்பனவுகளுடன் மொத்தம் 665,000 ரூபாவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிகாரியின் வயது வரம்பு 65 ஆக இருக்க வேண்டும். என்பதோடு அரச வரவு செலவுத் திட்டம், நிதிக் கொள்கை, அல்லது பொருளாதார பகுப்பாய்வு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக்கான குழுவின் தலைவருமான ஹர்ச டி சில்வா, முன்னாள் மூத்த பல்தரப்பு முகவர் நிபுணத்துவம் இந்த வேலைக்கு பொருந்துவார் என்று கூறியுள்ளார்.