உள்நாடு

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 1000/- ரூபா

களுத்துறையில் தன்னை ஏமாற்றிய சுற்றுலா வழிகாட்டியின் செயற்பாடுகளை சமூக ஊடகம் வாயிலாக வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

டிம் டென்ஸ் என்ற பெல்ஜிய சுற்றுலா பயணி, நாட்டின் தோற்றம், மற்றும் சிறப்பு அம்சங்கள் தொடர்பான ஆவணப்படங்களை தயாரித்து வருகிறார்.

தான் செல்லும் இடங்கள், அங்குள்ள சிறப்புகள், உணவு உள்ளிட்ட அனைத்தையும் அவர் சமூக ஊடகம் வாயிலாக நேரலையாக வெளியிட்டு வருகின்றார்.

களுத்துறைக்கு சுற்றுலா சென்ற அவர் உணவகம் ஒன்றுக்குச் சென்று உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர் அருந்துகின்றார்.

இதற்காக அவரிடம் இருந்து 1000 ரூபா கோரப்பட்டுள்ளது. இந்த விலைகள் நியாயமற்றவை என்று வெளிநாட்டவர் மிகவும் பணிவாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வெளிநாட்டு பயணி உணவகம் முன் நின்று ஒரு உளுந்து வடையின் விலை எவ்வளவு என்று ஒரு வழிப்போக்கரிடம் கேட்டுள்ளார்.

150 ரூபாய் விலையுள்ள உளுந்துவடைக்கும், தேனீருக்கும் 800 ரூபாய் வசூலித்தது தெரியவந்ததும் கடை உரிமையாளர் உடனடியாக வெளிநாட்டவருக்கு 200 ரூபாயை மீள கொடுத்துள்ளார்.

அப்போதும் கூட அவரிடம் இருந்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. “பணம் பிரச்சினை அல்ல, மக்கள் நேர்மையாக இருப்பது முக்கியமானது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறை தற்போது மெல்ல மெல்ல கட்டியெழுப்பப்படுகின்றது.

சுற்றுலா மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சி செய்யும் போது மிக அடிப்படையான விடயம், நாட்டின் நேர்மையைப் பற்றிய நம்பிக்கையை வெளிநாட்டவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் செயற்பாடானது, இலங்கை மீது வெளிநாட்டவர்கள் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை சிதைத்துவிடும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

3 வயது குழந்தை மீன்தொட்டியில் விழுந்து பலி.

மினுவங்கொடை – மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி

வெப்பநிலை உயர்வு