உலகம்

ஈரானின் தாக்குதல் மிரட்டலில் இஸ்ரேல் உஷார் நிலையில்…!

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் 2 இராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது.

இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வான்வழித் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது,

“இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இந்த தருணத்தில் ஈரானுக்கான என்னுடைய செய்தி, போர் வேண்டாம் என்பதுதான்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது..” என்றார்.

ஏற்கனவே இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையே போரால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் இருந்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல்- ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

 

Related posts

இலங்கையின் சுதந்திரதினத்தன்று – பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் 14 வருட சிறை!

சீனா சவகாசம் : எரிந்தது நாடாளுமன்றம்