உள்நாடு

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜி.எல். பிரிஸ் எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போது ஏனைய கட்சிகளுடன் உடன்படிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய வானிலை

பிரதான ரயில் பாதையில் தாமதம்

தீர்வுக்காக சுகாதார அமைச்சரை சந்திக்கும் பதில் நிதியமைச்சர்!