வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள், முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளதால் போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
வடகொரியாவின் இராணுவம் மற்றும் அரசியல் பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோதே கிம் ஜாங் உன் இந்த கருத்தை தெரிவித்தார்.
”வட கொரியாவுடன் இராணுவ மோதலை எதிரி தேர்வு செய்தால், தங்கள் வசம் உள்ள அனைத்து வழிகள் ஊடாக தயக்கமின்றி எதிரிக்கு மரண அடியை கொடுப்போம்.
முன்னெப்போதையும் விட இப்போது ஒரு போருக்கு முழுமையாக தயாராக இருக்க வேண்டிய நேரம் இது.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியா புதிய Hwasong-16B ஏவுகணையை அண்மையில் சோதனை செய்தது.
“Hwasong-16B ஏவுகணை உலகளவில் எதிரி தரப்பில் உள்ள எந்த இலக்கையும் வேகமாகவும், துல்லியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் தாக்கும் திறனை கொண்டது.” ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.
இந்த ஏவுகணைக்கு தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையிலேயே தற்போது போருக்கு தயாராக இருக்க வேண்டுமென்ற கருத்தையும் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அவதானம் செலுத்தியுள்ளன.