உள்நாடு

“மேற்கத்தேய நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல், பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் இனப்படுகொலை நிறுத்த பிராத்திப்போம்”

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள “ஈதுல் பித்ர்” வாழ்த்துச் செய்தி.!

மேற்கத்தேய நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல், பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளையும், பேரழிவுகளையும் மையப்படுத்தி அவர்களின் விமோசத்திற்காக “ஈதுல் பித்ர்’ ஈகைத் திருநாளில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பெருநாள் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இரவும் பகலும் இறை வழிபாடுகளில் அதிகமாக ஈடுபட்டு, இந்தப் புனித மாதத்தை சிறப்பாக வழி அனுப்பி வைக்கும் வேளையில், உள்நாட்டிலும் , உலக நாடுகளிலும் முஸ்லிம் சமூகத்தினரான நாம் பல்வேறு சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும், மத்தியில் புனித ரமழான் மாதத்தை சந்தித்தோம்.

இலங்கையைப் பொறுத்தவரை, நாட்டு மக்கள் அனைவருமே முன்னொருபோதும் இல்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, வாழ்வாதாரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வறுமைக்கோட்டின் விளிம்பிற்கே சென்றுள்ளதைக் காண்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில், ஆன்மீக பலத்தை மூலதனமாக வைத்து, நாட்டில் ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அல் குர்ஆன் மற்றும் அல் ஹதீஸ் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் ஈருலகப் பேறுகளை பெறுவதற்கு நோன்புப் பெருநாள் தினத்தில் நாங்கள் அல்லாஹ்விடம் மனம் உருகிப் பிரார்த்திப்போமாக.
ஈத் முபாரக்.

Related posts

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

சுகாதார சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயார்

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி