உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரியின் பதவி சட்டவிரோதமானததுதான்- ஒப்புக்கொண்ட துமிந்த

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மைத்திரியின் நீண்ட கால நெருங்கிய சகாவுமான துமிந்த திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தாம் உள்ளிட்ட கட்சியின் சில உறுப்பினர்களினால் தவறுதலாக மைத்திரி தலைமை பதவியில் அமர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனதிபதி மைத்திரி கட்சியின் போசகராக நியமிக்கப்படவிருந்த நிலையில், தாம் உள்ளிட்ட சிலர் அவரை கட்சியின் தலைமை பதவிக்கு நியமித்ததாக தெரிவித்துள்ளார்.

கட்சி யாப்பு பற்றிய போதிய தெளிவின்மையால் இந்த தவறு இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வெளிநபர்கள் சவால் விடுத்ததன் பின்னர் கட்சியின் யாப்பு குறித்து தெளிவு ஏற்பட்டது.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை ஜனநாயகமானதாக திருத்தி அமைக்கும் நோக்கில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Related posts

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்

அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய சுற்றறிக்கை…

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

editor