உள்நாடு

கொழும்பில், இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

பண்டிகைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பல கடைகள், காலாவதியான இனிப்புகளை திகதியை மாற்றி விற்பனை செய்ய முயன்றதாக நுகர்வோர் விவகார ஆணையம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எடுக்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலாவதியான இனிப்பு வகைகளை உட்கொள்வதால் பல்வேறு நோய் நிலைக்கு ஆளாவதாகவும் சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனிப்பு வகைகள் மாத்திரமன்றி கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சம்பா அரிசி விற்பனை செய்யும் கடைகளையும் நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

லங்கா ஐஓசியின் அறிவித்தல்

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

மேலும் 50,000 SputnikV தடுப்பூசிகள் நாட்டுக்கு