உள்நாடு

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் உலக தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும்.

பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல், சமூக நீதிக்காக குரல் கொடுத்தல், அனைத்து இலங்கையர்களுக்கும் சுத்தமான – சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீர் குறைந்த விலையில் கிடைக்கப்பெறுதல், நீர்துறையில் மறுசீரமைப்பு என தான் அமைச்சு பதவி ஏற்றதில் இருந்து புரட்சிகரமான மாற்றங்களுக்காக இவர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். அதற்கான வேலைத்திட்டங்களுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.

பொதுசேவையில் அவரது அர்ப்பணிப்பும், புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசிய அளவில் சிறந்த – நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம் உலக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

YGL சமூகம் என்பது உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைப்பில் உறுதிபாட்டை பகிர்ந்துகொள்ளும் 1000 இற்கு மேற்பட்ட இளம் தலைவர்களைக்கொண்ட ஒரு தனித்துவமான சமூகமாகும். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவ பண்பு மற்றும் அயராத முயற்சி என்பவற்றுக்கு கிடைத்த அங்கீகாரமே இத்தெரிவாகும்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு உலகளவில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த அங்கீகாரம் பெருமையளிக்கின்றது. அவருக்கு அமைச்சு சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுப்பதற்கும், இளைஞர் வலுவூட்டலை ஊக்குவிப்பதற்கும், உலக அரங்கில் இலங்கையின் வகிபாகத்தை மேம்படுத்துவதற்கும் அமைச்சருக்கு பக்கம் பலமாக இருப்போம்.

Related posts

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

வலுக்கும் கொரோனா : 251 பேர் அடையாளம்

பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை