உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தமக்கு தகவல் அறிய கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் தேவையாக உள்ளது. ஆனால் இது ஜனாதிபதிதியின் அதிகாரத்தை குறைக்கின்றது.

முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதே பசில் ராஜபக்ஷவின் விருப்பமாக உள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது”. என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் தேர்தல்களை ஒரே நாளில் நடாத்துவதே சிறந்ததெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Group: https://chat.whatsapp.com/Bts0PVJ35cbBRe8ldKg4H3

⚠ Tamil.utvnews.lk

Related posts

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை