தமிழரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையில் அடுத்த தவனை எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ளது என தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் (01)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்
எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம்
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு மத்திய குழு கூடி சரியாக பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கவும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க கூடியதுமான வேட்பாளரை தெரிவு செய்வோம் இது மத்திய குழு வின் தீர்மானத்தின் பின் சரியான முடிவுகளை எடுப்போம். கட்சியின் நிருவாக தெரிவு தொடர்பில் வழக்கு இடம் பெற்று வரும் நிலையில் 7 பேர் எதிர்தரப்புகளாக பெயரிடப்பட்டுள்ளனர் இதற்கான சாதகமான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் தெரிவை மீண்டும் நடத்தலாம் என எழுவரும் கூடி தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். எமது கட்சி பெண்களுக்கான சுயதொழில் வழங்குதல், தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்குதல், தந்தை செல்வாவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு போன்ற பல விடயங்களை செய்துள்ளது என்றார்.