அரசியல்உள்நாடு

மொட்டு வேட்பாளராக நான் உள்ளேன்- டிலித்

மொட்டு கட்சி நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி மொட்டு சின்னத்தை எனது கைகளினால் நானே வரைந்தேன். அந்த கட்சி பெசில் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல ,நாமல் ராஜபக்‌ஷவின் கட்சி அல்ல அது நாட்டை நேசிக்கும் 69 இலட்சம் மக்களின் கட்சி. இந்த நாட்டில் எந்த தேர்தல் நடத்த வேண்டுமென அமெரிக்க பிரஜையான பெசில் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற கட்சி மாவட்ட மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னையே தெரிவு செய்ய வேண்டும் மொட்டு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரனதுங்க கூறியுள்ளார். பெசிலின் மொட்டு கட்சிக்கே ஜனாதிபதி வேட்பாளர் இல்லை. நாட்டை நேசிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொட்டுகட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

தனியார் துறையினருக்கான அறிவித்தல்

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

ஈரான் செல்லும் அலி சப்ரி!