அரசியல்உள்நாடு

“சனத் நிசாந்தவின் மனைவி அரசியலுக்குள்- பதவியும் தயார்”

வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ( Sanath Nishandha) மனைவியும், சட்டத்தரணியுமான சமரி பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய,பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபைக்கு ஏழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

நாட்டில் தலைதூக்கும் டெங்கு