உள்நாடு

சிறுவர்களிடையே பரவும் நோய்: அவதானம்

சிறுவர்கள் மத்தியில் கை, கால், வாய் தொடர்பான தொற்று நோய்கள் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

நோயினால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, வாய், கை, கால் மற்றும் பிட்டம் முதலான உறுப்புகளில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

இது சின்னம்மை போன்றது. ஆனால், சின்னம்மை ஏற்பட்டால் மார்பு மற்றும் முதுகில் கொப்புளங்கள் தோன்றும். இது தொற்றக்கூடியது. 

இதுபோன்ற அறிகுறிகள் பிள்ளைகளுக்கு தென்பட்டால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சம்பிக்க தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு அடுத்தவாரம்

இன்று ஒருநாள் மாத்திரம் பாராளுமன்ற அமர்வு

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் தாயகத்திற்கு