உள்நாடு

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய