உள்நாடு

போதைபொருள் தடுப்பு நோக்கில் நீதி துறையுடன் இணைந்த நிகழ்வு

போதைப் பொருள் பாவனை அற்ற இளைஞர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் நீதி துறையுடன் இணைந்து உதைபந்தாட்ட நிகழ்வு நேற்று 26 ஆம் திகதி மாலை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

எம். ஜி. உதை பந்தாட்டப் பணிகளின் தொடரின் 40வது உதை பந்தாட்டப் போட்டியாக இந்த உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றதுடன், நிகழ்வுக்காக ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது பொலிஸ் நிலைய பிரிவில் இருந்து 200 பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம, எம் ஜி. ஹட்டன் கால்பந்தாட்ட லீக்கின் பயிற்சியாளர்கள் குழு, முழு உதைபந்தாட்டப் பணிகளின் ஸ்தாபகரும், இலங்கை கால்பந்து அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்றுவிப்பாளரும், அத்துடன் இலங்கை பொலிஸ் உதைபந்தாட்ட அணியின் தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளருமான திரு. மகிந்த கலகெதர, முழுப் பயிற்சிப் பணிகளையும் வழிநடத்தினார்.

இப்பயிற்சிப் பணிக்கு ஹட்டன் உதைபந்தாட்ட லீக்கின் பூரண அனுசரணையும் வழங்கப்பட்டதுடன், இப்பயிற்சிப் பணியில் இணைந்த மாணவர்களுக்கும் சீட்டு இழுப்பு, முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவருக்கு ரூபா 50,00/= பெறுமதியான பரிசு வவுச்சரும் வழங்கப்பட்டது.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

Related posts

கோட்டாபய – மைத்திரிபால இடையே சந்திப்பு

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பாரிய ஊழல் – இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு.