உள்நாடுசூடான செய்திகள் 1

சம்பள அதிகரிப்பு நெருக்கடி: ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை

தனது ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதனால்  ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக்  கருத்திற் கொண்டு மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று செவ்வாய்க்கிழமை (26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, மறுபரிசீலனை போன்ற காரணங்களால் நான் வெளியேறமாட்டேன் என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. நான் அதை செய்தேன். அதனால் நான் விலகுவதற்கு இதனை  ஒரு காரணமாக பார்க்கவில்லை.

தொழிற்சங்கங்களுடன் பேசியே  மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆறு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்