உள்நாடுவகைப்படுத்தப்படாத

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹுதா உமர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்தவின் நெறிப்படுத்தலில் 2024.03.24 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பசின்டு குணரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இவர்களுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, அம்பாறை Superintend of Police ஜெ.எச்.எம்.என். ஜெயபத்மா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சமிக்க அமரசிங்க, இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை பிராந்திய பிரதிப்பணிப்பாளர் கங்கா சகரிக்க தமயந்தி, கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் மஜீட், இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளரும் பிரதிப்பணிப்பாளருமான ஏ.ஹமீர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் சிங்களம் உள்ளிட்ட கற்கைநெறிகளை பூர்த்திசெய்த 300 மாணவர்கள் தாங்களுக்கான சான்றிதல்களைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

යුද හමුදාපති පාර්ලිමේන්තු තේරීම් කාරක සභාව හමුවේ සාක්ෂි දීම අරඹයි

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாக்கிஸ்தான் நாட்டின் தேசிய தின நிகழ்வு, கொழும்பில்- 2024