உள்நாடுசூடான செய்திகள் 1

CIDக்கு செல்ல நான் தயார் – மைத்திரி அறிவிப்பு

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வௌியிட்ட கருத்து தொடர்பில் நாளைய தினம் அவரிடம்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்படவிருந்தது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், அது தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Related posts

பழைய பாராளுமன்றத்தை பார்வையிட சந்தர்ப்பம் [VIDEO]

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்

ஜனாதிபதி அனுரவுக்கு சவுதி தலைவர்கள் வாழ்த்து

editor