உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லை என்று கூறிய அவர், விவரங்களை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த தகவல்களை கண்டிப்பாக ரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் கூறினார்.

Related posts

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி

சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு