உள்நாடு

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது


வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி நேற்றைய தினம் (21.03) பாடசாலைக்கு  சென்று தனது தனது சக மாணவி ஊடாக தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், குறித்த சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்ததுடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related posts

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை

கொவிட் 19 நிதியத்திற்கு 609 மில்லியன் ரூபாய் நன்கொடை

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு