உள்நாடு

ரோஹிதக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் அமைச்சரும் கோப் குழுவின் தலைவருமான ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மற்றும் ரோஹிதவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி ஊழல்,மோசடி மற்றும் விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு சட்டவிரோத நிதிச் சொத்துக்கள் பிரிவிடம் அதிகாரகாரபூர்வமாக செய்யப்பட்டுள்ளது.

1997ல் பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகி தற்பொழுது வரை பல பதவிகளை பெற்றுள்ளார். அத்தோடு சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.மற்றும் அவரின் வாங்கி கணக்குகள் மற்றும் அவரோடு தொடர்பான நெருங்கிவர்களின் வாங்கி கணக்குகளும் கணக்காய்விற்கு உட்படுத்த வேண்டும் என இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பு

அதிகரிக்கும் பேக்கரி பொருட்களின் விலை!

சில பகுதிகளுக்கான முடக்கம் தளர்வு