உள்நாடு

செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் இன்று (18.03) தெரிவித்தனர்.

செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் நேற்று (17.03) மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார். இச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வெற்றி தோல்விகள் நிரந்தரமானவை அல்ல – எஸ்.எம். மரிக்கார்

editor

குறிஞ்சாக்கேணி விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கான அறிவித்தல்