உள்நாடு

நீடிக்கப்பட்ட அதானி குழும விசாரணை

அமெரிக்க சட்டநிபுணர்கள், இந்தியாவின் அதானி குழுமத்தின் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை விரிவுபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் அல்லது கௌதம் அதானி உள்ளிட்ட நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள், எரிசக்தி திட்டத்திற்கு சாதகமான விடயங்களுக்காக இந்திய அதிகாரிகளுக்கு பணம் செலுத்தியுள்ளார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க சட்டவாதிகள் அலுவலகம் மற்றும் வோசிங்டனில் உள்ள நீதித்துறையின் மோசடி பிரிவு ஆகியவற்றால் இந்த விசாரணைகள் கையாளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : உக்ரைன் ஜனாதிபதி சவால்

ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : உக்ரைன் ஜனாதிபதி சவால்

மின்னஞ்சல் அறிக்கை

எனினும், ‘தமது நிறுவனத்தின் தலைவருக்கு எதிரான எந்த விசாரணை தொடர்பிலும் தமக்கு தெரியாது’ என்று அதானி குழுமம் மின்னஞ்சல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அத்துடன், மிக உயர்ந்த தரத்துடன் செயற்படும் வணிகக் குழுவான தாம், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள ஊழல் மற்றும் இலஞ்ச எதிர்ப்பு சட்டங்களுக்கு இணங்கி செயற்படுவதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் இணைப்புகள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாடுகளில் அதானி குழுமம் அதன் சொந்த நாட்டில் முக்கிய இடத்தை வகிப்பதுடன் உலகம் முழுவதிலுமிருந்து மூலதனத்தை ஈர்க்கிறது.

இந்நிலையில், இந்த முதலீட்டாளர்களில் அமெரிக்கர்களும், அமெரிக்க சந்தைகளும் தொடர்புகளை கொண்டிருப்பதால், வெளிநாட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு கூட்டாட்சி விசாரணையாளர்களை அமெரிக்க சட்டம் அனுமதித்துள்ளது.

அதானியின் சொத்து மதிப்பு

அதேவேளை, அதானியின் வர்த்தகம், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் மோசடி குற்றச்சாட்டுக்களால் நெருக்கடியை சந்தித்திருந்தது.

எனினும், அதானி குழுமம், அதன் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்திருந்துது.

அத்துடன், கௌதம் அதானியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய பசுமை முயற்சிகளை முன்னெடுத்து வரும் நேரத்தில், அதானி குழுமம், தம்மை உலகின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக நிலைநிறுத்த முயல்கிறது.

மேலும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை நோக்கி உயர்ந்துள்ளதுடன் இந்த உயர்வு அவரை உலகின் 14ஆவது பணக்காராக மாற்றியுள்ளது.

Related posts

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

பாராளுமன்ற நடவடிக்கைகள் செவ்வாய் வரை ஒத்திவைப்பு

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு