உள்நாடு

மருதமுனை இரட்டைக் கொலை பாடமாக அமையுமா?

மருதமுனை இரட்டைக் கொலை பாடமாக அமையுமா?………………

மற்றவனின் கவலையை கேட்க நமக்கெங்கு நேரமிருக்கிறது.

இது விதியா?
எழுதப்பட்டதா?

இரு கேள்விகளுக்குள்ளும் நாம் சிறைப்பட்டிருக்கின்ற போதும் மருதமுனையில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை ஏனோ மனதினால் ஜீரணிக்க முடியவில்லை.

செய்திப் பத்திரிகைகளிலும், இணையங்களிலும், தொலைக் காட்சிகளிலும் இதுவரை செய்திகளாக பார்த்த எம் ஊரவர்களுக்கு இன்று காலடியில் நடந்துள்ள இரட்டைக் கொலைச் சம்பவம் பல படிப்பினைகளை கொடுக்க வேண்டும்.

கொலைச் சம்பவம் பற்றி தெரியவருவது,

தனது இரு வலது குறைந்த பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வபாத்தாகியிருந்தார். மனைவியது இழப்பு அவரை வெகுவாகவே பாதித்திருந்தது.

வாழும் போது இஸ்லாமிய வழிமுறைகளை அறிந்து, புரிந்து செயற்படுவது பல குற்றங்களை இல்லாமல் செய்யும்.

சூழ் நிலை கைதியாக மாறி தனது இரு பிள்ளைகளையும் கழுத்தை வெட்டி கொலை செய்து தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முனைந்தவர் ஒரு கணமேனும் சிந்தித்திருக்கவில்லையா தான் செய்வது மறுமைக்கும்,இம்மைக்கும் தவறு என்பதை என எண்ணத் தோணுகிறது.(பிள்ளைகளின் கழுத்தை அறுக்கும் போது தெரியாத வலி தன் கழுத்தை அறுக்கும் போது தெரிந்ததுதான் ஆச்சரியம்)

வலது குறைந்த இரு பிள்ளைகளையும் தன்னால் இதற்கு மேல் பராமரிக்க முடியாதென இந்த முடிவுக்கு வந்தாரோ?

மனைவியின் மரணத்திற்கு பின்னர் தனது இரு பிள்ளைகளையும் ஹியூமன் லிங்க் பாடசாலைக்கு அனுப்புவதையும் அவரே நிறுத்தியுள்ளார்.

மனைவியின் மரணத்திற்கு பின்னர் தனது இரு வலது குறைந்த பிள்ளைகளையும் பராமரிக்க முடியாமல்,உதவி ஒத்தாசைகளின்றி சிரமப்பட்டு வந்தவருக்கு ஆறுதல் கூறவும் ஆள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணை

(உயிர் போன பிறகு கூடி நின்று,சோறு சமைத்து பகிருவதில் எந்த பிரயோசனமும் இல்ல,ஆக்கள் ஜாவோ)

நாங்கள் உறவுகளானாலும் வாழ்க்கையில் எங்களுக்கு அவ்வளவு பிசி,

ஒரு மனிதனுக்கு ஆறுதல் வார்த்தை கூறி அரவணைக்க கூட எங்களுக்கு நேரமில்லை,

வலது குறைந்த பிள்ளைகளை பராமரிப்பது அவ்வளவு சுலபமும் இல்லை.அந்த கஷ்டங்களை பராமரித்தவனே அறிவான்.

இருந்தும் கொலை என்பதும் தீர்வல்ல.அதற்கென இப்போது நிறைய வழிகளும் ஊரில் ஹியூமன் லிங்க் என்ற நிறுவனமும் உண்டு

அத்தனையையும் தாண்டி தன் பிள்ளைகளை தன் கையால் கொலை செய்வதற்கு அவரிடம் நிச்சயம் சுய புத்தியும்,நிதானமும் இருந்திருக்க போவதில்லை.

இரட்டைக் கொலை யார் செய்த குற்றம்?

#தந்தையா?
#உறவினர்களா?
#சமூகமா?
#பாடசாலை வராதவர்களை சென்று கூட்டி வர தவறிய ஹியூமன் லிங்க் நிர்வாகமா?
#அயலவர்களா?
#மார்க்கத்தை புரிய வைக்க முடியாத உலமாக்களா?
#பாக்கியதுஸ் ஸாலிஹா பள்ளி நிர்வாகமா?
#சகாத்/சதகா கொடுக்க தவறியவர்களா?
#மொத்த ஊருமா?

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சுவனத்து சிட்டுக்களின் மாண்பறியாத தந்தையவர் என்பதை தவிர வேறு வார்த்தையில்லை.

அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக

அலி பின் ரசாதி

 

தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு அழுத்தவும். 

Related posts

பாராளுமன்றம் இன்று கூடியது

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660