உள்நாடு

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் – வெல்லம்பிட்டிய வெலேவத்தை மைதானத்தில் பொலிஸ் மா அதிபர் சந்திப்பு

குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய வெலேவத்தை மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்கு சென்று அவர்களைப் பார்வையிட்டார்.

யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பெண்ணிடம் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தினார். அப்பொழுது இவ்வாறான கேள்விகளை தொடுத்துள்ளார்

பொலிஸ் மா அதிபர் – இதற்கு முன் எத்தனை முறை பொலிஸில் பிடிபட்டிருப்பாய்?

சந்தேக நபர் – இது தான் முதல் முறை சேர்.

பொலிஸ் மா அதிபர் – நேற்று வியாபாரம் ஆரம்பமா?

சந்தேக நபர் – ஆமாம் சேர் எனது இரண்டு குழந்தைகளுக்கும் சாப்பாடு போடுவதற்கு எனக்கு வேலை செய்ய முடியாதுள்ளது. அதனால்தான் இதனைச் செய்கிறேன்.

பொலிஸ் மா அதிபர் – போதைப்பொருள் விற்பளை செய்யாமல் உம்மால் வேறு ஏதாவது செய்ய முடியாதா?

சந்தேக நபர் – நான் சுவீப் டிக்கெற் விற்றேன் சார். என்னால நடக்க முடியல. கால்கள் வீங்கி இருக்கு. என்னால ஒண்ணும் பண்ண முடியாது.

என பொலீஸ் மா அதிபாரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்

Related posts

பாடசாலை சீருடையை வழங்கிய சீனா – நன்றி கூறிய பிரதமர் ஹரிணி

editor

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் வெளியாகின