உள்நாடு

மதுபான விற்பனை நிலையங்களால் பல்வேறு அசௌகரியம் – பூநகரி வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு

கடந்த 24.10.2023 திகதியிடப்பட்டு கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பூநகரி வைத்தியசாலையிருந்து 400 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் குறித்த மதுபானசாலை அமைந்துள்ளது. குறித்தமதுபான சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேவையற்ற சம்பவங்களால் வைத்தியசாலை அனுமதிகள் அதிகரித்துள்ளது.
மதுபான பாவனையின் பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் ஊழியர்களுடன் தேவையற்றதும், அநாவசியமானதுமான வார்த்தைப்பியோகங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான சம்பவங்களின்போது பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவதில்லை.
மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 1 மணிவலை மருந்து கட்டுவதற்கான வருகை தருபவர்கள் அதிகமாக உள்ளனர். நோயாளர் காவு வண்டிகள் பழுதடைந்த காலங்களில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்பட்டதாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மதுபான ரின்கள் உள்ளிட்டவை வைத்தியசாலை வளாகங்களிற்குள் வீசப்படுவதாகவும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் அருகருகில் இரண்டு மதுபான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மற்றுமொரு மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு மதுபான சாலைகளாலும் பாரிய நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபான நிலையங்களால் போக்குவரத்து செய்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட பொரு இடங்களில் மது பிரியர்கள் படுத்து உறங்குவதும், நோகரீகமின்றி செயற்படுவதும் அதிகரித்து உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மதுபான சாலைகள் முறையான அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மூடுமாறும் தெரிவித்து பெண்கள் அமைப்புக்கள், பிரதேசமட்ட அமைப்புக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
ஆனாலும், குறித்த மதுபான நிலையங்களை மூடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறத்த மதுபானசாலைகளை தற்பொழு அமைந்துள்ள பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் தொடர்ச்சியாக வலியுறு்தி வருகின்றனர்.“
பூநகரி வைத்தியசாலை பணிப்பாளரின் கடிதத்தில் வலியுறுத்தப்ட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி நந்தசேன காலமானார்

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது

ஓரினச்சேர்க்கை சட்டங்களை மாற்ற ஜனாதிபதி பணிக்குழு பரிந்துரை