உள்நாடுசூடான செய்திகள் 1

ஏப்ரலில் அரசியல் மாற்றம் : நாமல் எதிர்க்கட்சியில்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்பிருக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், பசில் ராஜபக்சவின் நடவடிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்ல உள்ளது. அத்துடன் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்புள்ளது.

மேலும் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாசவை இணைக்கும் நடவடிக்கை ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில்,சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினர்,தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க உள்ளனர் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி