உள்நாடு

“மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை”

பதிவு செய்யப்படாத மத மாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படாத மதமாற்றங்களில் ஈடுபடும் மத நிலையங்கள் மீது சோதனை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் பீடாதிபதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சமய வழிபாட்டுத் தலங்கள், பௌத்த பிக்குகள் மற்றும் மதச் சிதைவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளில் பௌத்த பிக்குகளுக்கு ‘வணக்கத்திற்குரியவர்’ மற்றும் ‘பிக்குனிகளுக்கு’ ‘வணக்கத்திற்குரியவர்’ என்ற பட்டங்களைச் சேர்க்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

கொழும்பில் குழப்பநிலை – மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில்

அதிகளவான எரிசக்தி தேவை – கஞ்சன