உள்நாடு

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி இருவர் பலி

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி இருவர் பலி என பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி பகுதியில் வசித்து வந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் நேற்று (08) பிற்பகல் மேலும் சில நண்பர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களை
மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி நேற்று இரவு உயிலங்குளம் திருக்கதீஸ்வரம் பாலாவி ஏரியில் மூழ்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதுடன் உயிலங்குளம் திருக்கேஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றினை பார்வையிட குழுவொன்றுடன் வந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள் – மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு

ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி