உள்நாடு

கிழக்கு சமூக சேவை சபையினால் மாணவர்கள், கல்வியலாளர்கள் கெளரவிப்பு : பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி

அரசியல் ஆளுமைகளை நினைவு கூறுதலும், இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் கிழக்கு சமூக சேவைச் சபையின் தலைவர் யூ.எல்.ஏ ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை (08)  கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் கல்வியலாளர்களை கௌராவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மைமூனா அஹமட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸீல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். றியாழ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம். ஏ. கலீலூர் ரஹ்மான், ஏ.எம். றியாஸ் (பெஸ்டர்), திருமதி பஸீரா றியாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா, இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், வெகுஜன தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா, கல்முனை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், கல்விமான்கள் நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பல துறைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சுமார் 75ற்கு மேற்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதோடு சிறந்த ஆளுமைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமேற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ?

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!