வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
தமிழ்வின்